வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை

1 month ago 6

திருவனந்தபுரம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார்.

இதையடுத்து, வயநாட்டின் எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பின்னர், காலியான வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர்.

இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி 1,49,346 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சத்யன் மெகோரி 48,895 வாக்குகள் பெற்று 2வது இடத்திலும், பாஜக வேட்பாளர் நவ்யா அரிதாஸ் 27,921 வாக்குகள் பெற்று 3 இடத்திலும் உள்ளனர்.

சத்யன் மெகோரியை விட சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலையில் உள்ளார்.

Read Entire Article