ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பொது இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படையிடம் ஒப்படைக்க ஈரோடு மாவட்டம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேக்கடையான் தோட்டத்துப்பகுதியில் வசித்து வரும் ராமசாமி- பாக்கியம்மாள் என்ற வயதான தம்பதி கடந்த 1-ம் தேதி துர்நாற்றம் வீசக்கூடிய நிலையில் கொலை செய்யப்பட்டு இருந்தனர். மேலும் 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த இரட்டை கொலை மற்றும் ஆணவ கொலை போல்இருப்பதாக காவல்துறை தரப்பில் முதலில் தெரிவிக்கப்பட்டது. இதனால் குற்றவாளிகளை பிடிக்க முதலில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தற்போது மொத்தம் 12 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டி நீலகிரி, ஊட்டி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் வரவலைக்கப்பட்டு குற்றவளிகளை பிடிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவல்துறைக்கு அழுத்தம் தரும் வகையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் பொது இடங்களில் அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலையானது 29-ம் தேதியே நடந்திருக்க கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதனால் 28, 29, 30, ஆகிய தேதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை காவல்நிலையத்தில் பணியாற்றக்கூடிய போலீசார் கைபற்றி தனிப்படையிடம் ஓப்படைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார்.
The post வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட விவகாரம்: பொதுஇடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தனிப்படையிடம் ஒப்படைக்க உத்தரவு appeared first on Dinakaran.