வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பேக்கரி உரிமையாளர் கைது

2 weeks ago 2

உசிலம்பட்டி, ஜன. 22: உசிலம்பட்டி கீழமாதரை காலனியைச் சேர்ந்தவர் பழனியாண்டவர் (55). இவர் வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள லட்சுமி அய்யங்கார் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். தனக்கு தினசரி வழங்கப்படும் ரூ.400 சம்பளத்தை 500 ஆக உயர்த்தித்தரும்படி கேட்டுள்ளார்.

பேக்கரி உரிமையாளர் கோபி (37) என்பவருடன் சேர்ந்து ரவி, நித்திஷ், சாமியார் ஆகியோர் பழனியாண்டவரை சின்னச்செம்மேட்டுப்பட்டிக்கு அழைத்துச் சென்று சாதிப்பெயரை சொல்லி திட்டி அடித்து தாக்கியுள்ளனர்.இது குறித்து பழனியாண்டவர் கொடுத்த புகாரின் பேரில், 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பேக்கரி உரிமையாளர் கோபியை கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.

The post வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பேக்கரி உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article