வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை: பெ.சண்முகம் வலியுறுத்தல்

4 hours ago 3

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு கிராமத்தில் நடைபெற்ற கொடூரமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாடு அரசு இந்த தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் அனைவரையும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும். வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசு உடனடியாக உரிய இழப்பீடுகளை வழங்கி அவர்கள் மீண்டும் குடியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை: பெ.சண்முகம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article