சென்னை: “மலைவாழ் மக்களுக்கு வனஉரிமை பட்டா வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட வனஉரிமை சட்டத்தை தமிழக அரசு ஆமை வேகத்தில் செயல்படுத்துவதால், பட்டா பெற முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்”, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், நில உரிமையும், பழங்குடி மக்களின் இனச்சான்று, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கிடக் கோரி, ஆர்ப்பாட்டம் சென்னையில் இன்று (பிப்.24) நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லி பாபு தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் ஆர்.தமிழரசன், துணை செயலாளர் எம்.அழகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.