வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கிய உணவில் புழு

4 hours ago 3

திருப்பதி: வந்தே பாரத் ரயிலில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்தன. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு தினமும் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியும் என்பதால் இந்த ரயிலில் பயணம் செய்ய பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

நேற்று திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. அப்போது பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்தன. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழுத்து மூலமாக புகார் அளித்தனர். இதையடுத்து புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. உணவுக்காக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ரயில்வே நிர்வாகம், பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கிய உணவில் புழு appeared first on Dinakaran.

Read Entire Article