வத்தலக்குண்டு, ஜன. 24: வத்தலக்குண்டுவில் போதையில் தவறி கீழே விழுந்த ஓட்டல் தொழிலாளி பலியானார். வத்தலக்குண்டு அருகேயுள்ள குளிப்பட்டியை சேர்ந்தவர் நாச்சிமுத்து (48). இவரது மனைவி கலையரசி. இவர்களது மகன் ருத்ரன், மகள் பூர்ணிமா தேவி. இந்நிலையில் நாச்சிமுத்து வத்தலக்குண்டுவில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மது போதையில் வத்தலக்குண்டு- மதுரை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடந்து சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அப்பகுதியில் உள்ள பாலத்தை கடந்து சென்ற போது திடீரென கீழே தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் சிலமலை, எஸ்ஐ ஜாபர் மற்றும் போலீசார் நாச்சிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வத்தலக்குண்டுவில் தவறி விழுந்த ஓட்டல் தொழிலாளி சாவு appeared first on Dinakaran.