வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது: தப்பிக்க முயன்றபோது கால், கை முறிவு

2 months ago 8

கூடுவாஞ்சேரி: வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் இருந்து கைது செய்ய முயன்றபோது, ஒருவருக்கு காலும், மற்றொருவருக்கு கையும் முறிவு ஏற்பட்டது. வண்டலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபடுவதாக ஓட்டேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை வண்டலூர் ரயில் நிலையம் அருகே, இரு வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த தகவல்படி, போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும், இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது, போலீசார் இருவரையும் துரத்தியபோது, கையில் வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை கீழே போட்டுவிட்டு, ரயில் தண்டவாளத்தில் ஓடினர்.

அப்போது இருவரும் தடுமாறி கீழே விழுந்து, போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்கள் விட்டு சென்ற 2 கிலோ கஞ்சாவை மீட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும், கடந்த ஆண்டு பிப். 29ல் கொலையான தி.மு.க. பிரமுகர் ஆராமுதன் கொலை வழக்கில் தொடர்புடைய சம்பத்குமார்(23), மணிகண்டன்(19) என்றும், சிறையில் இருந்து வெளியே வந்தபின், வண்டலூர் பகுதியில் தங்கி, கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், போலீசாரிடம் சிக்காமல் இருக்க தப்பி ஓடி, கீழே விழுந்ததில் மணிகண்டனுக்கு இடது கை முறிந்தது. சம்பத்குமாருக்கு வலது கால் முறிந்தது. இதனை அடுத்து, இருவரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்று இருவருக்கும் மாவு கட்டு போட்டனர். பின்னர், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

The post வண்டலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது: தப்பிக்க முயன்றபோது கால், கை முறிவு appeared first on Dinakaran.

Read Entire Article