சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பயணிகள் பயணம்

6 hours ago 2

சென்னை: கடந்த ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 27.06.2025 அன்று 3,72,503 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2025, ஜூன் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 44,03,575 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Whatsapp – (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூன் மாதத்தில் 92.19 லட்சம் பயணிகள் பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article