வட்டமடித்த விமானம் முதல் பத்திரமாக தரை இறக்கிய விமானி வரை: திருச்சி திக் திக் நிமிடங்கள் - ஒரு பார்வை

3 months ago 20

திருச்சி: திருச்சியில் வெள்ளிக்கிழமை 141 பயணிகளுடன் 15 முறை வானில் வட்டமடித்த விமானத்தால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். 2 மணி நேரம் போராடி விமானத்தை விமானிகள் பத்திரமாக தரை இறக்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வாகனங்கள் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ஃபெரி பிளைட் எனும் மாற்று விமானத்தில் 108 பயணிகள் சார்ஜாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பயணிகள் விமானம்: திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று (அக்.11) மாலை, 5.40 மணிக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (எண்: ix613), இரண்டு விமானிகள், ஆறு பணி பெண்கள் மற்றும் 141 பயணிகளுடன் சார்ஜாவுக்கு புறப்பட்டது. 186 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 ரக இந்த விமானம் ரன்வேயில் இருந்து மேல் எழும்பிய நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்த விமானத்தில் சக்கரங்கள் உள்ளிழுக்கவில்லை. உடனடியாக இதை கவனித்த விமானிகள், திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Read Entire Article