வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற சினிமா உதவி இயக்குநர் கைது

3 months ago 15

சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் தர்ஷன் (21), சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர், வடபழனி பகுதியில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாட்ஸ்அப் குழு மூலம் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக, வடபழனி உதவி கமிஷனருக்கு தகவல் கிடைத்தது. சினிமா உதவி இயக்குநர் என்பதால், தனிப்படை போலீசார் அவரை ஒரு வாரமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அசோக் நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இவர் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை நடப்பதாக உறுதியான தகவல் கிடைத்தது.

உடனே தனிப்படை போலீசார் அதிரடியாக சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்ற சினிமா உதவி இயக்குநர் தர்ஷனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு உதவி இயக்குநரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் யார் மூலம் வாங்கி விற்பனை செய்கிறார். அதன் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கல்லூரி மாணவர்கள் மற்றும் வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வரும் இளைஞர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து உதவி இயக்குநரை போலீசார் நீதிமன்றனத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற சினிமா உதவி இயக்குநர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article