
சென்னை,
சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மத்திய சென்னை, தென் சென்னை எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறதோ, அதேபோல வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அந்நிலையை மாற்றி வளர்ச்சி சென்னையாக உருவெடுத்து வருகிறது!
வடசென்னை பகுதியை தென் சென்னைக்கு இனையாக மேம்படுத்த வேண்டும் என பல திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.1,000 கோடி இல்லை, ரூ.6,400 கோடியாக வடசென்னை வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 29 மாவட்டங்களில் 49,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
90 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். விடியல் பயணம், புதுமைப்பெண், காலை உணவுத் திட்டம் என தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத பல திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். புதுமைப்பெண் திட்டத்தால் பயன்பெற்ற மாணவிகள் என்னை அப்பா அப்பா என அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.