தண்டையார்பேட்டை: சென்னை வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டப்பட்டு வரும் புதிய ரத்த சுத்திகரிப்பு மையம் மற்றும் தங்கசாலை பகுதியில் கட்டப்பட்டு வரும் 700 புதிய குடியிருப்புகள், யானைகவுனி பகுதியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், புதிய சமூக நலக்கூடம் மற்றும் விளையாட்டு திடல் மேம்படுத்துதல் என “ஒருங்கிணைந்த வளாகம்” ஆகிய பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் சிவஞானம், மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் உள்பட பலர் இருந்தனர்.
The post வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்த வளாக பணி: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு appeared first on Dinakaran.