வடக்கு காசாவில் இஸ்ரேல் குண்டு வீச்சில் 87 பேர் பலி: 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்

4 weeks ago 4

டெய்ர் அல்-பலாஹ்: வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்பட 87 பேர் பலியாகினர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் இன்னும் நீடிக்கும் நிலையில், ஹமாசுக்கு ஆதரவு தெரிவிக்கும் லெபனான், ஈரான், ஈராக் நாடுகளை குறி வைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹமாஸ் படையினரை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வருவதால், போரை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. காசா பகுதிகளில் வான் வழி தாக்குதலை தொடர்ந்து தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள இஸ்ரேல் ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காசாவில் இருந்து பாலஸ்தீனர்களை வௌியேறும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த போரின் தொடர்ச்சியாக ஹமாஸ் படையினரின் முக்கிய தலைவரான யஹ்யா சின்வர் கடந்த வியாழக்கிழமை(17ம் தேதி) இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு பழி வாங்கும் விதமாக கடந்த வெள்ளிக்கிழமை(18ம் தேதி) இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் வீடு மீது ஹமாஸ் படையினர் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் வடக்கு காசாவில் பயங்கர தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. அங்குள்ள பெய்ட் லாஹியா நகரில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு பயங்கர தாக்குதலை அரங்கேற்றியது. இந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள், ஒரு பெண் உள்பட 87 பேர் உயிரிழந்து விட்டனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

The post வடக்கு காசாவில் இஸ்ரேல் குண்டு வீச்சில் 87 பேர் பலி: 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article