பாலாற்றில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

10 hours ago 2

டெல்லி: வேலூர் பாலாற்றில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆலைகள் ஏற்படுத்திய மாசால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து பாலாறு பகுதிகளில் காற்று மாசை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

வேலூர் பாலாற்றில் மாசு ஏற்படுத்தும் தோல் தொழிற்சாலைகளை மூடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் ஜேபி பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து குழு அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் சுற்றுசூழல் விதிகளை தோல் தொழிற்சாலைகள் முறையாக பின்பற்றவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 2001, 2009 ம் ஆண்டு பிறபித்த உத்தரவின்படி தொழிற்சாலைகளிடமிருந்து இழப்பீட்டு தொகையை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். ஒன்றிய அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள், சுற்றுசூழல் நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து தோல் தொழிற்சாலை கழிவுகள் பாலாற்றில் கலப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும், பரிந்துறைகளை வழங்க உத்தரவு பிறபித்துள்ள நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

The post பாலாற்றில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article