வடகிழக்கு பருவமழையையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட 1,628 விளம்பரங்கள் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை

3 months ago 19

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் வைக்கப்பட்டிருந்த 1628 விளம்பர பலகைகள் மற்றும் பதாகைகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டன. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், விளம்பரப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் எவ்வித பாகுபாடுமின்றி தீவிரமாக அகற்றப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் கடந்த செப்.15ம் தேதி 15 மண்டலங்களிலும் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 1,311 விளம்பர பலகைகள், 317 விளம்பர பதாகைகள் என மொத்தம் 1,628 விளம்பரங்கள் கண்டறியப்பட்டு, அவை மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள், விளம்பர பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post வடகிழக்கு பருவமழையையொட்டி அனுமதியின்றி வைக்கப்பட்ட 1,628 விளம்பரங்கள் அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article