வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்

1 month ago 7

அரியலூர்,அக். 4: அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் விஜயலெட்சுமி, தலைமையில், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, முன்னிலையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தி வரும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை முறையாக சென்று சேர்வதை கண்காணிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து; மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களிடம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில்; செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்ல திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், குடிநீர் திட்ட பணிகள், வேளாண்மைத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், மாணவர்கள் தங்கும் விடுதிகளின் செயல்பாடு மற்றும் அடிப்படை வசதிகள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில்; செயல்படுத்தபட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களுக்கான விலையில்லா மிதிவண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், தவப்புதல்வன் திட்டம்;, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள், பள்ளிகள் இயங்கும் பள்ளி கட்டடங்களின் தன்மை, கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டுத்தப்பட்டு வரும் திட்டங்கள், புதிய தொழல் முனைவேர்க்கான தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

மேலும் வடகிழக்கு பருவமழையையொட்டி தகவல் தொடர்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர், பால், உணவு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். நோய்த் தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க உரிய பொது சுகாதார சேவை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். வடகிழக்கு பருவமழையையொட்டி தகவல் தொடர்பு, மின்சார வசதி போன்ற அத்தியாவசிய சேவைகளை தடையின்றி வழங்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர், பால், உணவு பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். நோய்த் தொற்று ஏதும் ஏற்படாமல் இருக்க உரிய பொது சுகாதார சேவை மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

The post வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article