வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள்: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு

3 months ago 11


சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், மீட்பு பணிகளுக்காகவும் 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் பேரிடர் மீட்பு நடவடிக்கைக்காக காவல் ஆணையர் அலுவலகத்தில் தலைமை கட்டுப்பாட்டு அறையும் (044-23452437) 12 காவல் மாவட்ட காவல் துணை ஆணையர் அலுவலகங்களில் 12 கட்டுப்பாட்டு அறைகளும், தவிர 35 இடங்களில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளும், கட்டுப்பாட்டு அறைகள் செயல்படும் இடங்களும் பொதுமக்கள் மற்றும் ஒருங்கிணைந்த மீட்பு குழுவினர் தொடர்பு கொள்வதற்கு வசதியாக தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு பருவமழையின் போது கனமழை, புயல், வெள்ளம், சூறாவளி காற்று என இயற்கை பேரிடர் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாக்கவும், அவசர அழைப்பிற்கு இடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்வதற்காகவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளவும், சென்னை பெருநகர காவல் 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மீட்பு குழுவும், ஒரு தலைமைக் காவலர் தலைமையில் 10 காவலர்கள் இருப்பர். ஒவ்வொரு மீட்பு குழுவுக்கும், மீட்பு பணிகளுக்காக தலா ஒரு வாகனம் என 12 வாகனங்களும், ரப்பர் படகு, மிதவை ஜாக்கெட்டுகள், கயிறு உட்பட 21 மீட்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவில் உள்ள காவலர்களுக்கு தனித்துவமான ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறு உள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்தும், மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாதவாறு தடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அவசர உதவி எண்களுடன் 24 மணி நேரம் சுழற்சி முறையிலும், பெருநகர சென்னை மாநகராட்சி பொது பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட அரசு துறைகளுடன் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படும். பூக்கடை காவல் மாவட்டம்: பூக்கடை காவல் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளான அம்மன்கோயில் தெரு, வால்டாக்ஸ்ரோடு சந்திப்பு, பெந்த நாயக்கன் தெரு, மண்ணடி மெட்ரோ பிரகாசம் சாலை, லோன்ஸ்கொயர் பிரகாசம் சாலை, எஸ்பிளனேடு காவல்நிலையம், ஆசிர்வாதபுரம், பிரகாசம் சாலை, மண்ணடி எக்ஸலன்ட் ஓட்டல் பிரகாசம் சாலை, அம்மன் கோயில் தெரு, பிரகாசம் சாலை சந்திப்பு, சவரி முத்து தெரு, தாதா முத்தையப்பன் தெரு, சின்னதம்பி தெரு சந்திப்பில் வசிப்பவர்களுக்கு மண்ணடி காவலர் குடியிருப்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மகள் எஸ்.ஐ. காமாட்சி (9740031681), எஸ்ஐ. கார்த்திக்ராஜா (9043442929), எஸ்.ஐ. கோபால் (9445490684) ஆகியோரை தொடர்பு கொள்ள வேண்டும்.

வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம்: இந்த மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளான மூலக்கொத்தளம், கண்ணன் ரவுண்டானா, பனைமரத்தொட்டி, கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் மண்டலம் 5 அலுவலகம், குழந்தைகள் நல மையம்(பாரத் தியேட்டர் அருகில்), புது சுராங்குடி கல்யாண மண்டபம் பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எஸ்.ஐ. மனோகரன் (9498144470), கார்த்திகேயன்(9498133646), குமார்(9498141304), வேல்முருகன், ரபிராஜன்(9498141668), எஸ்.எஸ்.ஐ.பாலசுந்தரம்(8056056260), எஸ்எஸ்ஐ சசிக்குமார்(9444216883) ஆகியோரை தொடர்பு கொள்ள வேண்டும். புனித தோமையார் மலை மாவட்டம்: இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் காலணி, மாதவபுரம், வழக்கறிஞர் ஜெகநாதன் தெரு, மோரிசன் தெரு, ஆலந்தூர் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல், சுரங்கப்பாதை பகுதியில் வசிப்பவர்களுக்கு நாடார் திருமணமண்டபம், எம்கேஎன் சாலை ஆலந்தூரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 6382256005 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பர்மா காலனி, மணப்பாக்கம், சிஆர்ஆர்புரம், எம்ஜிஆர் நகர், பெல்நகரில் வசிப்பவர்கள் பாலாஜா ரெசிடென்சி, ரிவர் வியூ காலனி, ஐஏஎஸ், ஐபிஎஸ் மணப்பாக்கம் பகுதியில் வசிப்பவர்கள் 9498131259 என்ற எண்ணிலும், பாலாஜிநகர் நங்கநல்லூர் லட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர்கள் அரிகரன் மஹால், எம்ஜிஆர் சாலை பழவந்தாங்கலில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 9094152710 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எல்ஐசி நகர், ராம்நகர், பஜார்சாலை, சதாசிவம் நகர், அன்பு நகர், அம்பாள் நகர், கார்த்திகேயபுரம் ராம்நகரில் வசிப்பவர்கள் எஸ்பி கிராண்ட் பேலஸ் ராம்நகர் மடிப்பாக்கத்தில் கட்டுப்பாட்டு அறை வைக்கப்பட்டுள்ளது. 984086890 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அம்பேத்கர் நகர், இந்திராநகர், கக்கன்நகர், ஆண்டாள் நகர், கிருஷ்ணாநகரில் வசிப்பவர்களுக்க லக்கி கல்யாண மண்டபம் ஆதம்பாக்கத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வசிப்பவர்கள் 7010177676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புளியந்தோப்பு காவல் மாவட்டம்: கன்னிகாபுரம், சத்தியமூர்த்தி நகர்-உதயசூரியன் நகர், சின்னகுழந்தை தெரு, வியாசர்பாடி போன்றவை தாழ்வான பகுதியாகும். சமுதாயநலக்கூடம், அங்களாம்மன் கோயில் தெரு, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி, எருக்கஞ்சேரி, ைஹரோடு, வியாசர்பாடி, சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஸ்கூல்ரோடு பகுதிகளில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எஸ்.ஐ.ஸ்டீபன், கிருஷ்ணகுமார், வெங்கடேஷ்வரன் 7305568925, எஸ்.ஐ காசிநாதன், நாதமுனி, எஸ்.எஸ்.ஐ.சுரேஷ் 7548899151, எஸ்.எஸ்.ஐ.ரகு, வேல்முருகன், கிருஷ்ணன் 8056846652 ஆகியோர் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். கொளத்தூர் காவல் மாவட்டம்: பெரவள்ளூர் காவல்நிலையம், ஜவஹர் நகர் 1வது தெரு மெயின்ரோடு, ஜிகேஎம் காலணி 9வது தெரு, சிட்கோநகர், அன்னை சத்யா நகர், நேருநகர், வள்ளியம்மைநகர், பாலராமபுரம், சிவசக்திநகர் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு லோகோ பிரிட்ஜ், சிட்கோநகர் சத்யா ஷோரூம், பிரகாஷ்நகர் ஆகிய பகுதிகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அதிகாரியாக எஸ்.எஸ்.ஐ.முத்துராமன் 9498135522, எஸ்.எஸ்.ஐ. ஜெயக்குமார் 9087837023, எஸ்.எஸ்.ஐ.விஜயா 9498128802, எஸ்.எஸ்.ஐ. விஜயன் 9498142354, முத்துராமலிங்கம் 9498192099 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி காவல் மாவட்டம்: எஸ்.எம்நகர், எல்லீஸ் புரம், லாக் நகர், ஜெகநாதன் தெரு, பொன்னிங்கிபுரம், ஜெயலட்சுமி புரம், நாகாஸ் பாயிண்ட் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு லாக்நகர், ஜெகநாதன் தெருவில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் எஸ்.ஐ.மலைச்சாமி 6381081493, பன்னீர் செல்வம் 9498126704 கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் காவல் மாவட்டம்
பி.எஸ்.சிவசாமி சாலை, கச்சேரிரோடு, புரோக்கன் பிரிட்ஜ் கெனால் முகத்துவாரம், சீனிவாசபுரம் மெரினா பீச் சர்வீஸ் சாலை, நொச்சிக்குப்பம், ஏகாம்பரம் பிள்ளை தெரு, அவ்வை சண்முகம் சாலை, அப்பாக்கண்ணு ெதரு, ராதாகிருஷ்ணன் சாலை, அனுமந்த புரம், வீரன்புரம், தேவராஜ் தெரு, பாரதி சாலை தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் பள்ளி, நெ. 1முதல் 9 வரை கல்விவாரு தெரு, மயிலாப்பூர், உட்லாண்ட்ஸ் சினிமாஸ், நெ.25 வெஸ்ட் காட் சாலை, ஹிந்துஸ்தான் பெட்ரோல் பங்க் அருகில் ராயப்பேட்டை, சென்னை உயர்நிலைப்பள்ளி கோட்டூர் நெ.2 வட்டம் 172, அவ்வை காலணி கோட்டூபுரம், எஸ்.ஐ.கிருஷ்ணன் 9498143862, எஸ்.ஐ.கோவிந்தராஜ் 8667317016, எஸ்.ஐ.காசுபாண்டி, மகளிர் எஸ்.ஐ. தனலட்சுமி 9952347227, எஸ்.ஐ.மாரிலட்சுமி 7598737356 ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க 12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள்: சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article