வடகிழக்கு பருவமழை ஆயத்த பணி: ஒரத்தநாட்டில் கலெக்டர் நேரில் ஆய்வு

3 months ago 10

தஞ்சாவூர், நவ. 28: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆயத்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார். வடக்குக்கோட்டை சித்தாண்டி ஏரியில் நீர்வரத்து குறித்தும், மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஒக்கநாடு கீழையூர் நன்னான் குளத்தில் மழைநீர் நிரம்பியுள்ளதையும், வயல்களில் மழைநீர் புகுந்து பயிர் சேதம் ஏற்படாமலிருக்க, குளத்திலுள்ள நீரை வாய்க்கால் மூலம் வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

பணிகளை துரிதமாகவும், பயிர்களுக்கு சேதமின்றி வயல்களில் புகுந்து விடாமலும் விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, தஞ்சாவூர் ஆர்டிஓ இலக்கியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன், தாசில்தார் சுந்தரவல்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வடகிழக்கு பருவமழை ஆயத்த பணி: ஒரத்தநாட்டில் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article