வடகிழக்கு பருவமழை - 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

2 months ago 23

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) தொடங்க உள்ளது. வருகிற 15-ந்தேதிக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதன் மூலம் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு. தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு. அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் பேரிடர் துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், போலீஸ் டி.ஜி.பி., தீயணைப்பு துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநகராட்சியில் துணை ஆணையர்களாக பணியாற்றிய 15 ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல்பாண்டியன், மேக்நாத்ரெட்டி, உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Read Entire Article