வட சென்னையில் மின் மாற்றிகளை சுற்றி கண்கவர் தடுப்பு சுவர்: அசுத்தம் தவிர்க்க புதிய நடவடிக்கை

3 hours ago 1

வட சென்னை​யில் மின் வாரி​யத்​தால் நிறு​வப்​பட்​டுள்ள 1,220 மின் மாற்றிகளை சுற்றி ரூ.45 கோடி​யில் கண்கவர் தடுப்பு சுவர் அமைக்க சென்னை மாநக​ராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. வட சென்னை​யில் மின் மாற்றிகள் நிறு​வப்​பட்​டுள்ள பகுதி​களில் பொது​மக்கள் குப்​பைகளை கொட்டி வருகின்​றனர். இதைத் தடுக்க வடசென்னை பகுதி​களில் நிறு​வப்​பட்​டுள்ள மின்​மாற்றிகளை சுற்றி கண்கவர் தடுப்பு சுவர்களை மாநக​ராட்சி அமைத்து வருகிறது.

இது தொடர்பாக மாநக​ராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறிய​தாவது: சென்னை மாநகரில் தடையற்ற மின்​சாரம் வழங்க சாலை​யோரங்​களில் மின் வாரியம் சார்​பில் மின் மாற்றிகள் நிறு​வப்​பட்​டுள்ளன. இவற்றை சுற்றி எந்தவிதமான தடுப்புச்​சுவரும் இன்றி பாது​காப்​பற்ற நிலை​யில் இருந்​தது. அவ்வாறான இடங்​களில் கட்டுமான கழிவுகளை கொட்டி, மாநகரின் அழகை கெடுக்​கும் வகையில் இருந்​தது.

Read Entire Article