பள்ளிப்பட்டு, மே 15: பள்ளிப்பட்டு அருகே சாணகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாயுடு, விவசாயி. இவரது மனைவி சாந்தி (60). இவர் நேற்று மதியம் பள்ளிப்பட்டில் உள்ள இந்தியன் வங்கியில் அவரது கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் எடுத்துக்கொண்டு கட்டைப் பையில் வைத்து அருகில் உள்ள ஆந்திரா வங்கிக்குச் சென்றுள்ளார். அங்கு செல்போனில் பேசிக்கொண்டே வங்கிக்கு வெளியே வந்து கட்டைப் பைய பார்த்தபோது அதில் வைத்திருந்த ஒரு லட்சம் ரொக்கப் பணம் மற்றும் வங்கி பாஸ்புக் திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வங்கிகுள் சென்று பார்த்தபோது அவர் பின்னால் முகமூடி அணிந்திருந்த பெண் அங்கிருந்து மாயமானது தெரியவந்தது. உடனடியாக வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்ட போது முகமூடி அணிந்திருந்த பெண் பணத்தை நூதன முறையில் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக சாந்தி அளித்த புகாரின் பேரில் பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆந்திரா வங்கியில் பதிவான வீடியோ காட்சிகளை வைத்து முகமூடி அணிந்திருந்த பெண் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வங்கியில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருட்டு: முகமூடி பெண்ணுக்கு வலை appeared first on Dinakaran.