வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

3 months ago 31

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்டது என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது, டெம்பா பவுமா தலைமையிலான அந்த அணியில் நீண்ட நாட்கள் கழித்து செனுரன் முத்துசாமி இடம்பிடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மகராஜ், மார்க்ராம், வியான் முல்டர்,செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

Read Entire Article