வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்; வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

14 hours ago 1

டாக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 8, 10, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இதையடுத்து வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரண்டன் கிங் துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்; ஷாய் ஹோப் (கேப்டன்), பிரண்டன் கிங் (துணை கேப்டன்), கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஜஸ்டின் க்ரீவஸ், ஷிம்ரன் ஹெட்மையர், அமிர் ஜாங்ஹோ, அல்ஜாரி ஜோசப், ஷமர் ஜோசப், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷென்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.

Read Entire Article