வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாளில் 307 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா

2 months ago 14

சட்டோகிராம்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஜோடியான மார்க்ரம் - டோனி டி ஜோர்ஜி இணை சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது. இவர்களில் மார்க்ரம் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 2-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டப்ஸ் - டி ஜோர்ஜி இணை வங்காளதேச பந்துவீச்சை எளிதில் சமாளித்தது.

அபாரமாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். சதம் அடித்த சிறிது நேரத்திலேயே ஸ்டப்ஸ் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 307 ரன்கள் குவித்துள்ளது. டி ஜோர்ஜி 141 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

Read Entire Article