வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி வேண்டுகோள்

1 month ago 7

கொல்கத்தா: வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு வீழ்ச்சியடைந்தது. அந்நாட்டில் இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார். இதனிடையே, வங்கதேசத்தில் முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது முதல் அந்நாட்டில் இந்து மதத்தினர் உள்பட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்து மதத்தினர் மற்றும் அவர்களது வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிற்கு வர விரும்புபவர்களை நாட்டிற்கு அழைத்து வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கதேச தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஒருசில போலி வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது’ என்றார்.

The post வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மம்தா பானர்ஜி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article