வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்: 19ம் தேதி அல்லது 20ம் தேதி மழைக்கு வாய்ப்பு

4 weeks ago 4

சென்னை: வங்கக் கடலில் எதிர்த்திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் காரணமாக, வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இது படிப்படியாக 19 அல்லது 20ம் தேதி நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இலங்கைக்கு கிழக்கே நீடித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது இது நாகப்பட்டினத்துக் கிழக்கே 300 கிமீ தொலைவிலும், சென்னைக்கு 500 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு நோக்கி நகர்வதில் சில பிரச்னைகளை சந்தித்து முன்னும், பின்னும் நகரும் தன்மை கொண்டதாக இருக்கிறது. குறிப்பாக எதிர்த்திசை காற்று 3100 மீட்டர் உயர்த்தில் பயணித்துக் கொண்டு இருக்கும் காரணத்தால், இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இதற்கு மேல் உயர்ந்து செல்ல வாய்ப்பு இல்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் இது தீவிரமடைய முடியாத வகையில் இடையூறுகள் அதிகமாக உள்ளன.

இதற்கிடையே இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தொடர்ந்து 21ம் தேதி வரையில் படிப்படியாக மெல்ல நகர்ந்து தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இடையூறுகள் அதிகம் இருப்பதால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உத்தரகாண்ட் மாநிலம் மற்றும் நேபாளம் வழியாக பயணிக்கும் வாய்ப்பு ஒருபுறமும், புவனேஸ்வர் வரை சென்று பின்னர் மியான்மர் பகுதிக்கு செல்லலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது எதிர்த்திசை காற்றின் பயணம், உயரழுத்தங்கள் இந்த நிகழ்வை சாதாரண தாழ்வுப் பகுதியாகவே மாற்றி மெல்ல வட தமிழக கடலோரப் பகுதிக்கு வந்து மழையை கொடுத்து பின்னர் மெல்ல விலகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது 21ம் தேதி வரை தமிழக கடலோரப் பகுதியில் இருக்கும். ஆனால் மழை தொடங்க தாமதம் ஏற்படும். கிழக்கில் இருந்து தரை வழியாக வரும் குளிர்க்காற்று, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியை சென்னை அருகே நெருங்க விடாது என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து, நள்ளிரவு நேரத்தில் வட கிழக்கு டெல்டாவில் மழை பெய்யத் தொடங்கும். இரு காற்றின் இணைவு இருப்பதால், நேற்று இரவில் மழை ெபய்யத் தொடங்கும்.அதேபோல உள் மாவட்டங்களிலும் மழை பெய்ய வா்ய்ப்புள்ளது. இது மேலும் வலுவிழந்து காற்றழுத்த சுழற்சியாகவே கடந்து சென்றுவிடும். இந்த நிகழ்வின் காரணமாக இன்று வட கடலோர தமிழகத்தில் அனேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும், விழுப்புரம், கடலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 19ம் தேதியில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 23ம் தேதி வரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டு இருப்பதால் இன்று, வடதமிழக கடலோரப் பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 45 கிமீ வேகத்தில் வீசும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

The post வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்: 19ம் தேதி அல்லது 20ம் தேதி மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article