வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது: இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்

1 hour ago 1

சென்னை: தென்​கிழக்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று புதிய காற்​றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது இன்று (நவ.24) காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெறக்​கூடும். இதன் காரணமாக நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்​டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு அந்த​மான் கடல் மற்றும் தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதி​யில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண​மாக, பூமத்திய ரேகை​யையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்​கடல் பகுதி மற்றும் அதையொட்டிய தென்​கிழக்கு வங்கக்​கடல் பகுதி​யில் காற்​றழுத்த தாழ்வு பகுதி உருவாகி​யுள்​ளது.

Read Entire Article