'வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' - மத்திய அரசுக்கு மாயாவதி கோரிக்கை

1 week ago 2

லக்னோ,

கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 13 மணி நேரத்திற்கும் மேலான விவாதத்திற்குப் பிறகு வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதா 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று சட்டமாக மாறி நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புதிய வக்பு வாரிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "வக்பு வாரிய திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இது அரசியலமைப்புக்கு எதிரானது. முஸ்லிம் மதத்தினருக்கு கேடு விளைவிக்கும் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்று மாயாவதி கூறினார்.

Read Entire Article