வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் திமுக எதிர்க்கும் - கனிமொழி எம்.பி.,

1 day ago 3

புதுடெல்லி,

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற பாஜக அரசு உறுதியாக உள்ளது. நாளை இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றால், நிச்சயம் அதை எதிர்ப்போம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி.,கனிமொழி கூறியதாவது:-

எங்களுடைய தலைவர் (மு.க. ஸ்டாலின்) தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆகவே, இந்த மசோதாவை திமுக எதிர்த்துக் கொண்டு வருகிறது. இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றால், அதில் பங்கேற்று, நிச்சயமாக மசோதாவை எதிர்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் முன்மொழியப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா,நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article