‘வக்பு சட்டம் 1995-ல் திருத்தங்கள் தேவையில்லை, ஏனெனில்...’ - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

22 hours ago 1

சென்னை: 1995-ம் ஆண்டு வக்பு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.2) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் விவரம்: இந்திய அரசமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. அந்த உரிமையை நிலைநாட்டுவதும் பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமையாகும். இருப்பினும், வக்பு சட்டம், 1995-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாததுடன் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்கு கடுமையான பாதிப்புகளை விளைவிப்பதாக இருக்கிறது.

Read Entire Article