வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்த மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

1 day ago 2

புதுடெல்லி,

வக்பு வாரிய திருத்தச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேறியது. இதனையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். ஜனாதிபதியின் ஒப்புதலை தொடர்ந்து அது சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு இன்று (புதன்கிழமை) விசாரிக்கிறது.

Read Entire Article