திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.
மேலப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். இங்கு அனைத்து முஸ்லிம் அமைப்புகள் ஜமாத்துகள் மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக 24 மணி நேர கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.