
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் கஜேந்திரகட் பகுதியில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் உள்ள வகுப்பறையில் இன்று மாணவ, மாணவியருக்கு ஆசிரியை பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வகுப்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் ஆசிரியை மற்றும் 2 மாணவர்கள் காயமடைந்தனர்.
இது குறித்து அறிந்த சக பள்ளி ஊழியர்கள் , காயமடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.