லைட்டர் உதிரிபாகங்கள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

3 months ago 20

சென்னை ,

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதுடன் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர் இருக்குமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தி மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல்-க்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சிகரெட் லைட்டர் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய - 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளமைக்காக மத்திய மந்திரி பியூஷ் கோயல் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முடிவு வரவேற்புக்குரியது. இதனால் தமிழ்நாட்டின் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலுப்பெறுவதுடன், சுமார் ஒரு லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும். மேலும், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் கழிவுகளும் குறையும். என தெரிவித்துள்ளார் 

Read Entire Article