லெபனானுக்குள் புகுந்த இஸ்ரேல் கடற்படை சிறப்பு கமாண்டோக்கள்; ஹிஸ்புல்லா கடற்படை தளபதி கைது

2 weeks ago 4

பெரூட்,

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. அதேபோல், லெபானானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது ஓராண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழு, ஹிஸ்புல்லா அமைப்பு, ஈராக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்கள், ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பினரை குறிவைத்தும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானுக்குள் புகுந்தும், வான்வழி மூலமாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், லெபனானுக்குள் புகுந்த இஸ்ரேல் கடற்படை சிறப்பு கமாண்டோக்கள் ஹிஸ்புல்லா கடற்படை தளபதியை கைது செய்தனர்.

இஸ்ரேலில் இருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் லெபனானின் கடற்கரை நகரமான பெட்ரோன் பகுதிக்குள் இஸ்ரேல் கடற்படையின் சிறப்பு கமாண்டோக்கள் அதிரடியாக நுழைந்தனர். அவர்கள் கடற்கரை அருகே உள்ள வீட்டில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா கடற்படை தளபதி இமாத் ஹமீசை கைது செய்து அழைத்து சென்றனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்டவர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர் இல்லை என்று லெபனான் மந்திரி தெரிவித்துள்ளார்.


BREAKING An Israeli commando kidnapped a Lebanese licensed boat officer, believing he was a high-ranking Hezbollah official, in a "daring operation" yesterday in Batroun north Lebanon. pic.twitter.com/BraFMuTdmy

— Hala Jaber (@HalaJaber) November 2, 2024


Read Entire Article