லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

4 hours ago 3

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேல் நீடித்து வரும் காட்டுத்தீயால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தீக்கிரையாகியுள்ளன. காட்டுத்தீ காரணமாக 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரவு முற்றிலும் நாசமாகியுள்ளது.

1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் என 14 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1 ஆயிரத்து 354 தீயணைப்பு வாகனங்கள், 84 விமானங்கள் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீயில் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, லாஞ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, இந்த காட்டுத்தீயில் 16 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழு தெரிவித்துள்ளது

Read Entire Article