லால்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

2 weeks ago 1

லால்குடி, ஜன.24: லால்குடியில் நெடுஞ்சாலைதுறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு, பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டம் லால்குடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது. உதவி பொறியாளர் கணபதி முன்னிலையில் லால்குடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை உதவி கோட்ட பொறியாளர் சிட்டிபாபு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

லால்குடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி நெடுஞ்சாலை வழியாக லால்குடி ரவுண்டானா சென்று பின்னர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் சாலை ஆய்வாளர்கள் பாபு, சோபியா, சிலம்பு செல்வி, மோகன், அண்ணாமலை உட்பட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பதாகைகளை கையில் ஏந்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post லால்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article