லால்குடி, ஜன.12: லால்குடி மணக்கால் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் லால்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டார். திருச்சி மாவட்டம் லால்குடி மணக்கால் அண்ணா நகர் பகுதியில் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக உழவர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசனம் விவசாயிகள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு விவசாயிகள் சங்க லால்குடி நகர தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். லால்குடி நகர செயலாளர் மில்டன் ஜி வரவேற்றார். விழாவில் லால்குடி இன்ஸ்பெக்டர் முத்தையன், தாசில்தார் முருகன், விவசாயிகள் சங்க ஒன்றிய துணை தலைவர் தங்கராஜ், நகர துணை தலைவர் வரதன் மற்றும் மகேந்திரன் கலந்து கொண்டு முன்னிலை வகித்து பேசினர். தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாய சங்க நிறுவனர் விஸ்வநாதன், லால்குடி வருவாய் வட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். தொடர்ந்து கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு சமத்துவ பொங்கல் வழங்கினர்.
விழாவில் மணக்கால் அண்ணா நகர் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post லால்குடியில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.