லால்குடியில் ஆம்புலன்ஸ் பணியாளர்களை தாக்கிய வாலிபர் கைது

7 hours ago 1

லால்குடி, மார்ச் 20: லால்குடி அருகே 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் டெக்னீசியனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் கொத்தமங்கலத்தை சேர்ந்த கௌசல்யா என்பவர் பிரசவத்திற்காக, சிறுமயங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றார். காட்டூர் கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கெளசல்யா உறவினரான அஜித்தும் அவருடன் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால், லால்குடி அரசு மருத்துவமனைக்கு கெளசல்யாவை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, புள்ளம்பாடியை அடுத்த வரகுப்பை பகுதியை சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மகேந்திரன் (31) அவரை ஆம்புலன்சில் ஏற்றி செல்ல முயன்றனர். அப்போது, டிரைவர் மகேந்திரன் மற்றும் டெக்னீசியன் ஆகியோரை மதுபோதையில் இருந்த அஜித் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் லால்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன் அஜித் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

The post லால்குடியில் ஆம்புலன்ஸ் பணியாளர்களை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article