லால்குடி, மே 5: லால்குடி வட்டார பகுதியில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. ஆலங்கட்டி மழையாக பெய்ததால் வாட்டி வதைத்த வெயிலுக்கு மழை யால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் அதை சுற்றியுள்ள புள்ளம்பாடி, கல்லக்குடி, பெருவளப்பூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வாட்டி வைத்த நிலையில் பொதுமக்கள் மிகவும் கஷ்டம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் மாலை 5 மணி அளவில் திடீரென காற்று மின்னலுடன் மழை தொடங்கியது மழை தொடங்கியுடன், பல்வேறு பகுதியில் ஆலங்கட்டி மழையாக பெய்தது.
The post லால்குடி வட்டார பகுதியில் இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை appeared first on Dinakaran.