லார்ட்சில் 5 விக்கெட்டுகள்: அருங்காட்சியகத்திற்கு நினைவு பரிசு வழங்கிய பும்ரா

4 hours ago 1

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்களில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியின் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றுவது கவுரமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக லார்ட்சில் உள்ள எம்சிசி அருங்காட்சியத்திற்கு தனது கையொப்பமிட்ட ஷூக்களை நினைவு பரிசாக ஜஸ்பிரித் பும்ரா, வழங்கியுள்ளார்.

Read Entire Article