லாரி மோதியதில் 3 பேருக்கு நேர்ந்த சோகம்.. சாலையை கடக்க முயன்றபோது நடந்த விபரீதம்

4 months ago 37
சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது பார்சல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 12 வயது சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். திப்பம்பட்டியைச் சேர்ந்த சென்னன், அவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷ்ணு ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் மல்லூரில் உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நெடுஞ்சாலையின் நடுவே சாலையை கடக்க முயன்றபோது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
Read Entire Article