'லாபதா லேடீஸ்' கதை திருட்டு குற்றச்சாட்டு திரைக்கதை ஆசிரியர் மறுப்பு

1 week ago 4

மும்பை,

இயக்குனர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வெளியான 'லாபதா லேடீஸ்' திரைப்படம். ரசிகா்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை நடிகா் அமீா்கான், இயக்குனர் ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் பிரதிபா ரந்தா, ஸ்பா்ஷ் ஸ்ரீவஸ்தவா நிதான்ஷி கோயல், சாயா கடம் உள்ளிட்டவா்கள் நடித்துள்ளனா். இப்படம் 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு தேர்வாகி பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தப் படம் 2019-ல் வெளியான அரேபிய குறும்படமான 'புர்கா சிட்டி' கதையைப் போலவே இருப்பதால், படத்தின் கதை திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இதன் திரைக்கதை ஆசிரியர் பிப்லாப் கோஸ்வாமி மறுப்பு தெரிவிதுள்ளார்.

அதாவது, "இந்த கதை 100 சதவீதம் என்னுடையது. இதில் கதைத்திருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. கதை திருட்டு என்று சொல்வது என்னுடைய உழைப்பை மட்டுமல்ல, ஒட்டுமொத்த படக்குழுவையும் சிறுமைபடுத்தும் செயல் ஆகும். இந்தப் படத்தின் சுருக்கமான கதை மற்றும் முழுக்கதையின் மேலோட்டமான விவரிப்புடன் 'டூ பேட்ர்ஸ்' என்ற தலைப்பில் திரைக்கதை ஆசிரியர்கள் அசோசியேஷனில் கடந்த 2014-ம் ஆண்டில் பதிவு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

Read Entire Article