லாட்ஜில் தங்கியவர் திடீர் சாவு

3 months ago 20

 

நத்தம், அக். 9: மதுரை மாவட்டம், சென்னகரம்பட்டியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (62). வழக்கறிஞர். இவர், மேலூரில் குடும்பத்துடன் தங்கி வக்கீல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் நத்தத்துக்கு வந்த அவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கட்டுள்ளது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் பாண்டிச்செல்வம் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி மற்றும் போலீசார் பாண்டிச்செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாட்ஜில் தங்கியவர் திடீர் சாவு appeared first on Dinakaran.

Read Entire Article