'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ரிலீஸ் அப்டேட்

2 weeks ago 3

சென்னை,

'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க காதல் கதை களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாகின.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற மே மாதம் 16-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Read Entire Article