"லப்பர் பந்து" படம் : ஹரிஷ் கல்யாணின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

3 months ago 23

சென்னை,

கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படத்தை சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடித்துள்ளனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் பிரபலமடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன. கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்ப படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ஹரிஷ் கல்யாண் இந்த திரைப்படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லப்பர் பந்து' திரைப்படம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த காட்சியின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

BTS Video of HarishKalyan from #LubberPandhu pic.twitter.com/G5O7SxKu36

— AmuthaBharathi (@CinemaWithAB) October 7, 2024
Read Entire Article