செய்யூர்: லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு கலந்துரையாடல் நிகழ்ச்சி, அவரது தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு பெருந்தலைவர் சாந்தி ராமச்சந்திரன், துணை பெருந்தலைவர் சித்ரா ராஜேந்திரன், தாசில்தார் சரவணன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி அனைவரையும் வரவேற்றார்.இதில், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மனுக்களை பெற்று பேசுகையில், ‘அரசு வழங்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு உங்கள் ஊராட்சி மேம்படுத்த வேண்டும். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் நியாய விலைக் கடை, பள்ளி கட்டிடம், பேருந்து நிழல் குடை, அங்கன்வாடி மையம், சிமென்ட் சாலை, தார் சாலை, சுகாதார நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரிலும் செய்யூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை வைக்க உள்ளேன்’ என்றார். இந்த நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசு, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நடராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் நீதிதேவன், வேளாண்மை துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கவுன்சிலர் பாரதிபாபு உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி: எம்எல்ஏ பனையூர் பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.