லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதம்: சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த 500+ பயணிகள்

6 months ago 35

சென்னை: லண்டன், சிங்கப்பூர் செல்ல வேண்டிய விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் 500 பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பயணித்தனர்.

லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் செல்வது வழக்கம் ஆகும். இன்று (அக்.2) இந்த விமானத்தில் சென்னையில் இருந்து லண்டன் செல்வதற்காக 317 பயணிகள் அதிகாலை 2.30 மணிக்கு முன்பாகவே விமான நிலையம் வந்து அனைத்து பாதுகாப்பு சோதனைகளையும் முடித்துவிட்டு காத்திருந்தனர்.

Read Entire Article