லண்டனில் 'ரெட்ரோ' படத்தைப் பார்த்த பூஜா ஹெக்டே - யாருடன் தெரியுமா? : வைரலாகும் வீடியோ

3 weeks ago 8

சென்னை,

தமிழில் 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து கவனம் பெற்றார். தற்போது இவர் சூர்யாவுடன் 'ரெட்ரோ' படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படத்தில் ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே லண்டனில் 'ரெட்ரோ' படத்தை பார்த்துள்ளார். அவருடன் நடிகர் வருண் தவான் மற்றும் மிருணாள் தாகூரும் 'ரெட்ரோ' படத்தை பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டே, வருண் தவானுடன் 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹாய்' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

Pooja Hegde watched #Retro in London! pic.twitter.com/ZvazL17JE8

— Christopher Kanagaraj (@Chrissuccess) May 2, 2025
Read Entire Article